டெல்லியில் எடப்பாடி சந்தித்த நிலையில் உச்சி வெயிலில் பாஜவுக்கு உதயகுமார் ஓவர் ஐஸ்

மதுரை: இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் அமித்ஷா என மாஜி அமைச்சர் உதயகுமார் திடீரென புகழ்ந்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களுக்கு முன் எடப்பாடி, இந்திய தேசத்தின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியது, இந்திய நாட்டிலே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளை எடுத்து வைப்பதில் திறமையானவர் எடப்பாடி.

இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தருவதற்காக அந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் படேலின் மறுவடிவமாக அமித்ஷா பார்க்கப்படுகிறார். தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பெற்று தருவதற்காக தான் இந்த சந்திப்பு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது. இந்த உண்மையை மறைக்க பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது. தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கையை அமித்ஷாவிடம் 2 மணிநேரத்துக்கு மேலாக பேசியுள்ளார்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுகவினர் கூறி வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று கூட்டணியை உறுதி செய்தி திரும்பிய நிலையில், அதிமுக தலைவர்கள் பாஜ தலைவர்களை புகழ்ந்து பேசுவதும், சப்பை கட்டும் பேட்டிகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் சூழலுக்கு ஏற்ப தடலாடி பல்டி அடித்து பேட்டி கொடுப்பதில் அதிமுகவில் உதயக்குமாருக்கு ேபாட்டியே இல்லை என அக்கட்சியினரே கூறுகின்றனர். சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ்சை ஆரம்பத்தில் ஓவராக புகழ்ந்து பேசியும், அரசியல் சூழ்நிலைகள் மாறியதும் தடாலடியாக புழுதிவாரித் தூற்றியும் அவர் அளித்த பழைய பேட்டிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post டெல்லியில் எடப்பாடி சந்தித்த நிலையில் உச்சி வெயிலில் பாஜவுக்கு உதயகுமார் ஓவர் ஐஸ் appeared first on Dinakaran.

Related Stories: