திருச்செங்கோடு, மார்ச் 22: திருச்செங்கோட்டில் நடந்த ஏலத்தில் ₹2.15 லட்சத்திற்கு கொப்பரை விற்பனையானது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் திருச்செங்கோடு தலைமையகத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 40 மூட்டை கொப்பரையை கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் ₹140.75 முதல் ₹168.00 வரையிலும், 2ம் தரம் ₹130.85 முதல் ₹138.85 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் ₹2.15 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.
The post ₹2.15 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.