சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா

சேந்தமங்கலம், மார்ச் 21: சேந்தமங்கலம், சோமேஸ்வரர் கோவிலில், 5ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேந்தமங்கலத்தில் வரலாற்று புகழ் பெற்ற சௌந்தரவள்ளி அம்பாள் சோமேஸ்வரர் கோயில் உள்ளது. 5ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி காலை சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர் இளநீர் உள்ளிட்ட 24 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, காரவள்ளி, செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் பஞ்ச மூர்த்திகள் சோமேஸ்வரர் தேர் வீதி உலா நடைபெற்றது.

The post சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: