தூய்மை பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு

திருச்செங்கோடு, மார்ச் 20: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம் மொரங்கம், வையப்பமலை பகுதிகளில், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், பேட்டரி வண்டியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடல் ஒலிப்பதையும், தூய்மை காவலர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரம் செய்வதை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தினமும் குப்பைகளை சேகரம் செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலவிநாயகம், அருளப்பன் உடனிருந்தனர்.இது குறித்து அவர் கூறுகையில், ‘தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களின் பணிகளை நேரில் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். நல்ல நிலையில் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து தர வேண்டியது அவசியம்,’ என்றார்.

The post தூய்மை பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: