நாமக்கல், மார்ச் 21: நாமக்கல்லில், கோயில் பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் கோட்டை பகுதியில், செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் தர்மகர்த்தா ராஜேந்திரன் நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 13ம் தேதி அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவர், மது போதையில் கோயில் பூசாரி ஸ்ரீகாந்த் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கோயில் கண்காணிப்பு கேமராவை உடைத்து சாக்கடையில் வீசியதுடன், பூசாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என கூறியிருந்தார். இதன்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து கோயில்பூசாரியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த, விஜய் (26), வினோத் (எ) வினோத்குமார் (27) ஆகிய இருவரையும் கைது
The post பூசாரிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.