தேன்கனிக்கோட்டை : கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த சித்தாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி(51). இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் அந்த ஆடுகளை அடைத்து, பராமரித்தும் வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல ஆடுகளை மேய்சலுக்கு அழைத்துச் செல்ல பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு நாய்கள் ஒன்று சேர்ந்து, ஆடுகளை கடித்து குதறிக்கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதையடுத்து, நாய்களை பட்டியில் இருந்து விரட்டினார்.நாய்கள் கடித்ததில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 12 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீஸ் ஸ்டேஷனில் குப்புசாமி புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த வேடியப்பன்(40) என்பவர் வளர்த்து வரும் நாய்கள் தான், ஆடுகளை கடித்து குதறியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அஞ்செட்டி அருகே பட்டிக்குள் புகுந்து நாய்கள் கடித்ததில் 12 ஆடுகள் பலி appeared first on Dinakaran.