சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது

செங்கம், மார்ச் 23: செங்கம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் மாஸ்டரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் முருகன்(49), சமையல் மாஸ்டர். இவர் நேற்று மாலை அருகிலுள்ள ஒரு பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சென்று தாயிடம் ஒப்படைத்தனர். அப்போது தாய் விசாரித்ததில், சிறுவனுக்கு அடிக்கடி முருகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் இதுகுறித்து செங்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சமையல் மாஸ்டர் முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

The post சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சமையல் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Related Stories: