சேத்துப்பட்டு, மார்ச் 13: சேத்துப்பட்டில் மாசி மகம் முன்னிட்டு பசுபதி ஈஸ்வரருக்கு வில்வ அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை சேத்துப்பட்டு பழம்பேட்டை வந்தவாசி சாலையில் உள்ள பழமை வாய்ந்த உமாபார்வதி சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்தில் மாசி மகம் முன்னிட்டு 108 வில்வ குடம் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பசுபதி ஈஸ்வரர் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு சுவாமிக்கு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
The post மாசி மகம் முன்னிட்டு பசுபதி ஈஸ்வரருக்கு வில்வ அபிஷேகம் appeared first on Dinakaran.