தமிழை பாதுகாக்கும் அரணாக திமுக நிற்கும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு இந்தி திணிப்பு கண்டித்து பொதுக்கூட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், திருவண்ணாமலை திருவள்ளுவர் சிலை அருகே பாஜக அரசின் இந்தி திணிப்பு, நிதி வழங்காமல் வஞ்சிப்பது, தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயலாளர், சி.என்.அண்ணாதுரை எம்பி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றிய செயலாளர்கள் மெய்யூர் சந்திரன், ரமணன், இளைஞர் அணி துணைஅமைப்பாளர்கள் கண்ணதாசன், ராஜசேகர், ரமேஷ், சதீஷ்குமார், திலீப்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். துணை மேயர் ராஜாங்கம் வரவேற்றார்.
பொதுக் கூட்டத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், எம்பி சி.என்.அண்ணாதுரை ஆகியோர், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து பேசினர்.

அப்போது தமிழ்நாட்டில், இந்தியை திணிப்பதன் மூலம் தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. திமுக எப்போதும் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் அரணாக நிற்கும் என பேசினர்.
திமுக செய்தி தொடர்ப்பு துணை செயலாளர் ஹபிசுல்லா, இளம் பேச்சாளர் மதன்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபுகஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், தொமுச மாநில துணைத் தலைவர் சவுந்தரராசன், மாவட்ட அமைப்பாளர்கள் நேரு, கார்த்திகேயன், ரவி, பிரவீன் ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

The post தமிழை பாதுகாக்கும் அரணாக திமுக நிற்கும் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேச்சு இந்தி திணிப்பு கண்டித்து பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: