ஊட்டி, மார்ச் 15: தமிழக அரசின் பட்ஜெட்டை பொதுமக்கள் அனைவரும் காணும் வகையில் ஊட்டியில் ஏடிசி பகுதியில் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜேட்) நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒவ்வொரு பொதுமக்களும் அறிந்திடும் வகையில் ஒவ்வொரு மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் எல்இடி திரை மூலம் நேரலை மூலமாக ஒலிபரப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் நகராட்சி சார்பில் ஏடிசி சுதந்திர திடல் பகுதியில் எல்இடி திரை மூலம் ஒலிபரப்பப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பயணிகள் நேரடியாக பார்வையிட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புக்களை அறிந்துக் கொண்டனர். மேலும், இந்த நேரலை காணொலியை மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ, மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலளார் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஊட்டி நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி மற்றும் ஆகியோர் பார்வையிட்டனர்.
The post தமிழ்நாடு அரசின் பட்ஜெட் எல்இடி திரை மூலம் ஒளிபரப்பு appeared first on Dinakaran.