கூடலூர், மார்ச் 18: மதுபான ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து நீலகிரி மாவட்டம், கூடலூர் காந்தி சிலை பகுதியில் மாவட்ட பொது செயலாளர் நளினி சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மண்டல தலைவர் பாலன், மாவட்ட செயலாளர் சிபி, பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பத்மஜா, முருகன், யோகராஜ், சுதீஷ், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், சசிகுமார், முரளி மற்றும் துணை தலைவர்கள், செயலாளர்கள், அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
The post கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜவினர் 17 பேர் கைது appeared first on Dinakaran.