கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது

ஊட்டி, மார்ச் 6: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் என்னும் இயேசு கிறிஸ்து உயிர்ப்பு விழா பண்டிகை கொண்டாடுவதற்க்கு முன்பு 40 நாட்கள் தவமிருப்பர். இதன் தொடக்க நாளான நேற்று அனைத்து தேவாலயங்களிலும் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றபட்டு குறுத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலை மந்திரித்து நெற்றியில் சாம்பலை பூசிவிட்டனர். ஊட்டியில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற திருப்பலியில் அனைவருரின் நெற்றியில் சாம்பல் பூசப்பட்டது.

மேலும், இத்திருபலியில் பங்கு தந்தை ரவிலாரன்ஸ் உதவி பங்கு தந்தை இம்மானுவேல் உட்பட பல குருக்கள் பங்கேற்றனர். தவ காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் வருதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மேலும் துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தில் உயிர், உடமைகளை இழந்தவர்களுக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஊட்டி மேரிஸ் தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கு குரு செல்வநாதன், உதவி பங்கு குரு டிக்சன் குருத்தோலை சாம்பலை புனிதப்படுத்தினர். இதேபோன்று ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள அன்னை திரேசா தேவாலயத்திலும் சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டம் முழுவதும உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நேற்று சாம்பல் புதன் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டு தங்களது தவக்காலத்தை துவக்கினர்.

The post கிறிஸ்துவர்களின் தவக்காலம் துவங்கியது appeared first on Dinakaran.

Related Stories: