கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் மாசி மாத திருவிழா கோலாகலம்

பாலக்காடு, மார்ச் 13: கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். நேற்று முன்தினம் யானைகள் ஓட்டப்பந்தயம், இரவு கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. நாள் தோறும் மூலவருக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றபடி உற்சவ மூர்த்தியையும், மூலவரையும் வழிப்பட்டனர்.

விழாவையொட்டி பத்து நாட்களும் பக்தர்களுக்கு கோவில் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம், அன்னதான அன்ன லட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் வழங்கி வருகின்றனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இரண்டாவது நாள் உற்சவத்தையொட்டி கோவில் வளாகத்தில் மூன்று யானைகள் அலங்கார அணிவகுப்புடன் உற்சவ மூர்த்தி யானை மீது பஞ்சவாத்திய மேள தாளங்களுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வரும் 18 ம்தேதி பள்ளி வேட்டையும், 19 ம்தேதி ஆறாட்டு உற்சவமும் நடைபெறுகிறது.

The post கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் மாசி மாத திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: