திருப்பூர், மார்ச் 18: திருப்பூர், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். பிச்சம்பாளையம் புதூரில் உள்ள ஒரு வீட்டில் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து போலீசார் விசாரித்தனர். இதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி (44), திருக்குமரன் (34) உள்ளிட்ட 6 பேர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.2500 பணம் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
The post சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.