சிவகாசியில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் 57வது கிளை துவக்கம்

சிவகாசி, நவ. 20: இந்தியாவின் முன்னணி கருத்தரிப்பு மற்றும் ஐவிஎஃப் தொடர் மருத்துவமனையான ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் சிவகாசி பத்திரகாளி அம்மன் கோயில் அருகே பராசக்தி காலனியில் தனது 57வது மையத்தை தொடங்கியது. இம்மையம் 37 வருடத்திற்கு மேலாக கருத்தரிப்பு சிகிச்சை அனுபவத்துடன் 1.5 லட்சத்திற்கு மேற்பட்ட தம்பதியினருக்கு குழந்தை பேறுக்கான தரமான உயர்தர சிகிச்சை மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ ெதாழில்நுட்பத்துடன் ஐவிஎஃப் மற்றும் கருத்தரித்தல் சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த புதிய கருத்தரிப்பு மையத்தை, வி.எஸ்.கே.டி டிரஸ்ட் தலைவர் ராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதன்பின், சபரிராஜன், கார்த்திக் (லண்டன்), டாக்டர் ஷங்கர் (சிறுநீரகம்), ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் முத்துவேல் மற்றும் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய நிறுவனர் டாக்டர் சந்திரலேகா ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். தொடக்க விழாவை முன்னிட்டு, அனைத்து தம்பதியினருக்கும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் ஐயூஐ/ஐவிஎஃப் சிகிச்சை மற்றும் ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சந்திரலேகா, ‘‘கடந்த 37 ஆண்டுகளுக்கு மேலாக கருத்தரிப்பு மருத்துவ பணி வளர்ச்சியில் எண்ணற்ற குடும்பங்களுக்கு குழந்தை செல்வங்களை உருவாக்க நாங்கள் உதவியுள்ளோம். சிவகாசி நகரில் நவீன தொழில்நுட்பத்துடன் அனுபவமிக்க மருத்துவர்களை கொண்டு இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் கருத்தரிப்பு சிகிச்சை ெபற விரும்பும் தம்பதியினருக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையும்.’’ என்றார்.

The post சிவகாசியில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் 57வது கிளை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: