ஐயப்ப பக்தர்கள் சீசன் துவக்கம் பழநியில் ஸ்வெட்டர் விற்பனை அதிகரிப்பு

பழநி, நவ. 20: ஐயப்ப பக்தர்களின் சீசன் காரணமாக பழநியில் ஸ்வெட்டர் விற்பனை அதிகரித்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி உள்ள நிலையில் பழநி நகருக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், விடுமுறை தினம் என 6 மாத காலம் பழநி நகரில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான அளவில் பொம்மை கடைகள், பிளாஸ்டிக் மற்றும் பேன்சி பொருள் கடைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தவிர ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் மாவு பொம்மைகள், மத்தளம், மூங்கில் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய பழநி நகரில் குவிந்துள்ளனர். தற்போது அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அடிவார பகுதியில் ஏராளமான ஸ்வெட்டர் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக கொடைக்கானல், ஊட்டி பகுதிகளில் அதிகளவில் ஸ்வெட்டர்கள் மற்றும் ஜர்க்கின்கள் விற்பனை செய்யப்படும். இம்முறை ஐயப்ப பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான அளவில் ஸ்வெட்டர் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

The post ஐயப்ப பக்தர்கள் சீசன் துவக்கம் பழநியில் ஸ்வெட்டர் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: