திருப்பூர், நவ.20: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், உள்ளாட்சி தினமான கடந்த 1ம் தேதி நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டு வருகிற 23ம் தேதி காலை 11 மணியளவில் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களை கௌரவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தாய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராமசபை கூட்டத்தை திறம்பட நடத்திட ஏதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, கிராம பொதுமக்கள் மேற்படி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மேற்காணும் பொருள்கள் மற்றும் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக தெரிவிக்க விரும்பும் நல்ல ஆலோசனைகள் குறித்தும் விவாதித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
The post திருப்பூர் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் appeared first on Dinakaran.