திண்டுக்கல்லில் கலை திருவிழா போட்டி

திண்டுக்கல், நவ. 20: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 4 பள்ளிகளில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். திண்டுக்கல் புனித லூர்து அன்னை பள்ளியில் நடந்த கலை திருவிழா போட்டி துவக்க விழாவுக்கு முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்தார்.

மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் போட்டிகளை துவங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு நடனம், நாடகம், பாடல், திருக்குறள் ஒப்புவித்தல், கவின் கலைகள், இசை கருவிகள் வாசித்தல் உள்பட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடக்க உள்ள போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திண்டுக்கல்லில் கலை திருவிழா போட்டி appeared first on Dinakaran.

Related Stories: