இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை வைத்ததால், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு தவணையாக தண்ணீர் திறந்துவிட்டனர். தற்போது, மழை பெய்து வருவதால், கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. தற்போது தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டில் நேற்று 411 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதுவரை தமிழகத்திற்கு 3,500 மில்லியன் கன அடி தண்ணீர் அதாவது 3.5 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு 411 கன அடி தண்ணீர் வருகை appeared first on Dinakaran.