தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவை பல்வேறு மாநிலங்கள் சரியாக பின்பற்றவில்லை: உச்சநீதிமன்ற அதிருப்தி

டெல்லி: தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் திறனை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தரவை பல்வேறு மாநிலங்கள் சரியாக பின்பற்றவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் கதை சொல்லி வருகின்றன. அசாம் மாநிலத்தை தவிர யாரும் இது குறித்த தகவல்களை சமர்பிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய சூழலில், அந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் தன்னிச்சையான வழக்காக எடுத்துக் கொண்டு தொடர்ந்து கவனித்து வருகிறது.

தெருநாய்களின் தாக்குதல்கள், ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் போன்றவை அதிகரித்து வருவதை நீதிமன்றம் பலமுறை குறிப்பிட்டும், மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியும் அதிகரித்தது. ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Related Stories: