வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் ஆணை!!

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க நாளையுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில் மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் எஸ்.ஐ.ஆர். பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விடுபட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜனவரி 18-ம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜனவரி 30 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. புதிதாக வழங்கப்பட்ட படிவங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவேற்றி பிப்ரவரி 17இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

Related Stories: