கர்நாடகா: கர்நாடகா மாநிலம் சிவமொகாவில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. 10 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணம் இன்ஜின் பகுதியில் இருந்து பேருந்துக்கு உள்ள வரக்கூடிய மின் வயர்களில் கசிவு என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் இதை உறுதி செய்யப்படவில்லை. 40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்தில் ஆம்னி பேருந்து முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது.
லேசாக தீ பற்ற தொடங்கியதும் டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி வைத்து பயணிகளை அவசரமாக கீழே இறக்கினர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பயணிகளுக்கு லேசான காயங்களை ஏற்பட்டது. டிரைவர் துரிதமாக செயல்பட்டதால் 40 பேர் அதிர்ஷவசமாக உயிர் தப்பினர். இது முதல் முறை அல்ல பலமுறை கர்நாடகாவில் இதைப்போன்று சமீபகாலமாகவே தனியார் பேருந்துகால தீ விபத்து என்பது தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே கர்நாடகாவிற்குள் இதே எல்லாம் மிகவும் தீவிரமாக கண்காணிக்கபடும் என அறிவுறுத்தி இருந்தாலும் கூட இதுபோன்று காலங்களில் ஏசி பஸ்களில் விபத்து என்பது தொடர்கிறது.
இந்த நிலையில் நடைமுறைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என்பது இன்று விபத்துக்கு பிறகு கர்நாடகாவிற்கு விழித்திருக்கிறது. இந்த விபத்தில் ஓட்டுநர் பாராட்டப்பட உள்ளார். ஓட்டுநர் கவனக்குறைவாக இல்லாமல் உடனடியாக பேருந்தை நிறுத்தி தீ வரும் போதே பயணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்தது பாராட்டப்பட வேண்டிய விஷயமக இருக்கிறது. ஓட்டுநர் 40 உயிரிகள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
