கிரீன்லாந்தை கைப்பற்ற அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: கிரீன்லாந்தை கைப்பற்ற அந்நாட்டின் மீது படையெடுக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற முடிவை வாபஸ் பெற்றார் டிரம்ப். கிரீன்லாந்தை வாங்க எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகள் மீது பிப்.1 முதல் 10% வரி அமல் என டிரம்ப் அறிவித்திருந்தார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே நாடுகளுக்கு 10% வரி என்ற அறிவிப்பு வாபஸ் பெற்றார்.

கிரீன்லாந்தை கைப்பற்றும் ஒப்பந்தம் காலதாமதமாகும் பட்சத்தில் ஜூன் 1 முதல் வரி 25 சதவீதமாக உயரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தனது அடுத்த டார்கெட்டாக கிரீன்லாந்து நாட்டை குறிவைத்துள்ளது. வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பனிப் பிரதேசமான கிரீன்லாந்து ஐரோப்பிய நாடான டென்மார்க் அரசாட்சிக்கு உட்பட்டது. மேலும், “உலகத்தின் அமைதி தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

Related Stories: