இந்தூர்: மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த மாதம் அசுத்தமான குடிநீர் குடித்த பலரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக பகீரத்புரா குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர். இதனிடையே அங்கு ஆட்டோ ஓட்டுனர் ஹேமந்த் கெய்க்வாட்(50) உயிரிழந்துள்ளார்.
மாசடைந்த நீரை குடித்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த ஒரே நபர் உயிரிழந்துவிட்டதால் அரசு அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும் என்று குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
