எஸ்ஐஆர் விசாரணைக்கு பயந்து தற்கொலை தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு பதிவு: மேற்கு வங்க போலீஸ் நடவடிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும், எஸ்ஐஆர் விசாரணைக்கு பயந்து பொதுமக்கள் தற்கொலை செய்து கொள்வதும் நீடிக்கிறது.  அந்த வகையில் பாரா பிளாக்கில் உள்ள சவுதாலா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின முதியவரான துர்ஜன் மாஜி கடந்த டிசம்பர் 29ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக துர்ஜன் மாஜியின் மகன் பாரா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், சம்பவம் நடந்த 23 நாள்களுக்கு பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் சதி ஆகிய குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

Related Stories: