சென்னை : குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது என்றும் ஒன்றிய அரசு வழிகாட்டலில் 33% வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
