அவசரமாக தரையிறங்கிய விமானம் விபத்து: 6 பேர் காயம்

புவனேஷ்வர்: ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து புவனேஷ்வருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டு இருந்தது. 9 இருக்கைகளை கொண்ட இந்த விமானத்தில் 2 பயணிகள் மற்றும் 2 விமான பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் ரூர்கேலாவில் இருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளார்.

இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் லேசான காயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மாநில வர்த்தக மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெனா கூறுகையில், அதிர்ஷ்டவசமாக இது பெரிய விபத்து அல்ல. விமானத்தில் இருந்தவர்கள் லேசான காயம் அடைந்துள்ளனர் ” என்றார். விமானம் எதற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறித்த காரணங்கள் உடனடியாக தெரியவில்லை.

Related Stories: