கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி பதிவுகளை சரிசெய்வதற்கு பதிலாக வாக்காளர்களை நீக்குவதற்கான ஒரு நடவடிக்கையாக மாற்றப்பட்டுள்ளது .
சிறு எழுத்துப்பிழை அல்லது வயது முரண்பாடுகள் சாதாரண மக்களுக்கு வற்புறுத்தல் நிறைந்த விசாரணைகள், துன்புறுத்தல் மற்றும் ஊதிய இழப்புக்கு வழிவகுப்பதாக உள்ளது. ஏற்கனவே 77 மரணங்கள், 4 தற்கொலை முயற்சிகள் மற்றும் 17 பேர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
