டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே டெல்லி சென்ற நிலையில் பழனிசாமியும் சென்றார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில், கூட்டணியில் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை இணைப்பது தொடர்பாக அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பாஜக 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியது. இதன் காரணமாக கூட்டணியில் பாஜகவுக்கு எவ்வளவு தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது.

Related Stories: