சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரை சந்தித்து திமுக-வில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் இணைந்தார்.
பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதரன் திமுகவில் இணைந்தனர். சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள். திண்டுக்கல்லை சேர்ந்த வழக்கறிஞரான சுப்புரத்தினம் ஓபிஎஸ்-ன் மிக தீவிரமான ஆதரவாளர். அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் விளக்கப்பட்ட போது அவர் கூடவே பயணித்தவர். ஓபிஎஸ்-ன் சட்ட போராட்டங்களிலும் முக்கிய பங்கு வகித்தவர் சுப்புரத்தினம் ஆவார்.
