புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எடப்பாடி பழனிசாமியை நாளை (இன்று) சந்திக்கப்போகிறேன். ஏற்கனவே பாமக கூட்டணியில் வந்துள்ளது. எங்களை நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். உங்களை விட்டு நிறைய பேர் பிரிந்து போகிறார்களே என்று. எல்லாமே நல்லபடியாக நடக்கும் என்று சொல்லி இருந்தேன். அதன் முதல் கட்டமாக தற்பொழுது பாமக அன்புமணி கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார். மேலும் நானும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை என்னவென்று பார்ப்போம். பாஜவை பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் எந்த நெருக்கடியும் கிடையாது. நாங்கள் சுதந்திரமாக செயல்படுவோம். தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமல்ல. ராமதாஸ் கருத்திற்கு நான் தற்போது கருத்து கூற முடியாது. அதிமுகவில் ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்தும் நான் கருத்து சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டணியில் நெருக்கடியா? எடப்பாடியை இன்று சந்தித்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை: நயினார் பேட்டி
- எடப்பாடி
- நைனார்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- ஜனாதிபதி
- நைனார் நாகேந்திரன்
- ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- எடப்பாடி பழனிசாமி
- பா.ம.க.
