கடலூரில் இன்று தேமுதிக மாநாடு கூட்டணி அறிவிப்பா?

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் பாசார் கிராமத்தில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தேமுதிக கூட்டணி தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதோடு, சில அறிவிப்புகளையும் பிரேமலதா வெளியிட வாய்ப்புள்ளதால் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டு பணிகளை தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேற்று பார்வையிட்டார். அப்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: