மதுரை: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு பகுதியில் நேற்றுமாலை நடந்தது. இதில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,‘2026ல் தீர்மானிக்கும் சக்தியாக இருப்போம். தமிழ்நாட்டில் இனி வரும் ஆட்சியில் நாம் இடம் பெறவேண்டும். சாதியை அரசியலாக மாற்றினால் தான் வெற்றி பெற முடியும். அரசியல் அதிகாரத்திற்கு வராமல் எதையும் சாதிக்க முடியாது. புதிய தமிழகம் இடம் ெபறுவது தான் வெற்றி கூட்டணி. 2019 அதிமுக கூட்டணியில் இரட்டை இலையில் போட்டியிட்டோம். அதிமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் கூட என்னோடு ஓட்டு கேட்க வரவில்லை’ என்றார்.
சாதியை அரசியலாக மாற்றினால் தான் வெற்றி: கிருஷ்ணசாமி பேச்சு
- கிருஷ்ணசாமி
- மதுரை
- 7வது
- மாநாட்டில்
- புதியா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கட்சி
- பண்டிகோவில் ரிங் ரோடு
- ஜனாதிபதி
- டாக்டர்
