அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான் 40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பாஜ பேரமா? சீமான் பரபரப்பு பேட்டி

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விதிமீறல் மற்றும் அவதூறாக பேசிய வழக்குகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண் 2 மற்றும் நீதிமன்றம் 3ல் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக அளித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பது தேர்தல் நேரத்தில் வழக்கமான வேடிக்கை. திருவிழாக்களில் நடக்கும் நாடகம் போன்று குற்றச்சாட்டுகள் பார்த்து ரசித்து சிரித்து விட்டு செல்வதுதான் அது. பாமக-அதிமுக கூட்டணியில் இணைவது எதிர்பார்த்த ஒன்று தான். அன்புமணிக்கு அதிமுக கூட்டணியை தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லாததால் இணைந்துள்ளார்.

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீது எந்த விசாரணை வளையத்திற்குள் அரசு கொண்டுவரவில்லை. விசாரணை செய்வதில் குற்றமில்லை. இறுதியாக என்ன குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள் என்பதை பொறுத்துதான். இதற்கு கருத்து சொல்ல வேண்டிய தேவை இல்லை.இவ்வாறு சீமான் கூறினார். தொடர்ந்து, கடந்த தேர்தலில் 40 சீட், ரூ.400 கோடி தருவதாக அழைத்தும் கூட்டணிக்கு செல்லவில்லை என பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், ‘அதிமுக, பாஜ தான் கூட்டணிக்கு அழைத்தார்கள்’ என பதில் அளித்தார். பணம் தருவதாக சொன்னார்களா? என மீண்டும் கேட்டதற்கு, ‘அது இப்போ இல்லை, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிற்கிறேன். வேண்டாம் என சொன்ன பிறகு யார் அழைத்தால் என்ன’ என சிரித்தபடி மழுப்பலாக பதில் அளித்து சீமான் புறப்பட்டார்.

Related Stories: