விஜய்க்கு அழுத்தமா? பாஜ தலைவர்கள் பதில்

கோவை: கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாமக கூட்டணியில் இணைந்து இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலம் அளித்து உள்ளது’ என்றார். அப்போது, பாஜ கூட்டணிக்குள் வருவதற்காக ஜனநாயகன் படத்துக்கு அழுத்தம் கொடுப்படுகிறதா? என்ற கேள்விக்கு, ‘நடிகர் விஜய்க்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. ‘ஜனநாயகன்’ தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. 41 பேர் இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

இதேபோல், கோவை விமான நிலையத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேரும் பொழுது தான் விஜய் அசைக்க முடியாத சக்தியாக மாறுவார். இல்லாவிட்டால் அவர் அசைத்துப் பார்க்கின்ற கட்சியாக தான் இருக்கும். ஜனநாயகன் படத்திற்கு எப்போது தணிக்கை அனுமதி கிடைக்கும் என நானும் எதிர்பார்க்கிறேன். படம் பார்க்கலாம் என ஆர்வமாக இருக்கிறேன். சென்சார் போர்டை நீதிபதி விமர்சித்தால் நான் என்ன செய்ய முடியும். சென்சார் போர்டுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சிபிஐ, சென்சார் போர்டை வைத்து தவெகவை கூட்டணிக்கு கொண்டு வர பாஜ நினைக்கின்றதா? என்ற கேள்வியை நான் சென்சார் செய்கிறேன். விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தால் என்ன தவறு?. விஜய் சிந்திக்க வேண்டும். பாமக தலைவர் ராமதாசை புறக்கணித்திருப்பதற்கு நான் பதில் சொல்லவில்லை. இது அவங்க கட்சி பிரச்னை, அவ்வளவுதான்.’ என்றார்.

Related Stories: