அன்புமணி இருக்கும் கூட்டணியில் எப்போதும் இணைய மாட்டோம்: ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அறிவிப்பு

சேலம்: பாமக்வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள மோதலால் கட்சி இரண்டாக உடைந்து உள்ளது. இந்நிலையில், அதிமுக-பாஜ கூட்டணியில் இணைந்ததாக அன்புமணி நேற்று அறிவித்தார். இதுகுறித்து ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘பாட்டாளி மக்கள் கட்சி வரலாற்றில் இதுவரை எந்தக்கட்சியாக இருந்தாலும் தைலாபுரத்திற்கு சென்று நிறுவனர் ராமதாசை சந்திப்பார்கள். அதன்பிறகே எந்த கட்சியுடன் கூட்டணி என்று முடிவெடுத்து, நிர்வாகிகள் சென்று அவர்களை சந்திப்பார்கள். இது பாமகவிற்கான தனிகவுரவம். இதை சிதைக்கும் வகையில் அன்புமணி, தனது கோஷ்டியுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை அறிவித்து தொகுதிகளையும் முடிவு செய்துள்ளார். ராமதாசை பழிவாங்குவதாக நினைத்து கட்சியை கேவலப்படுத்தியுள்ளார். இதை உண்மையான பாட்டாளி மக்கள் தொண்டர்கள் யாரும் ஒரு ேபாதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,’’ என்றனர்.

இதுகுறித்து ராமதாஸ் ஆதரவாளரான சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கூறுகையில், ‘சேலத்தில் நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பாமக யாருடன் கூட்டணி ேசரவேண்டும் என்பதற்கான முழுஅதிகாரத்தையும் நிறுவனர் ராமதாசுக்கு வழங்கி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ராமதாஸ் பக்கமே 95சதவீதம் பாமகவினரும், பொதுமக்களும் உள்ளனர். எனவே அவர் அறிவிப்பது தான் உண்மையான பாமக கூட்டணி. அன்புமணி இருக்கும் கூட்டணியில் நாங்கள் எப்போதும் இணையமாட்டோம் என்பது மட்டும் உறுதி,’’ என்றார்.

Related Stories: