மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக நடிகை தேவிஷா ஷெட்டி கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ், கடந்த 2016ம் ஆண்டு தேவிஷா ஷெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரிக்கெட் உலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இவர் மீது, பிரபல நடிகையான குஷி முகர்ஜி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷி முகர்ஜியிடம், ‘கிரிக்கெட் வீரரை காதலிப்பீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து குஷி முகர்ஜி கூறுகையில், ‘எனக்கு கிரிக்கெட் வீரர்களை காதலிக்க விருப்பமில்லை. பல வீரர்கள் என் பின்னால் வந்தனர். சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்புவார். ஆனால் இப்போது நாங்கள் அதிகம் பேசுவதில்லை. அவருடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவதை விரும்பவில்லை. எங்களுக்குள் காதல் உறவு ஏதும் இருந்ததில்லை‘ என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். திருமணமான ஒரு முன்னணி கிரிக்கெட் வீரரின் பெயரை குறிப்பிட்டு இவ்வாறு நடிகை குஷி முகர்ஜி கூறியிருப்பது விளம்பரத்திற்காகத் தான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
