குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி

புதுடெல்லி: குடியரசுத் தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியை பொறுத்தமட்டில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான கர்தவ்யா பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை பல லட்சம் மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.

இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இதற்கான பணிகளை ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர்கள் குழு தான் தேர்வு செய்கிறது.

இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தினத்தன்று தமிழ்நாடு சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற ஒன்றிய அரசு தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில், பசுமை மின் சக்தி தொடர்பான அலங்காரங்கள் வாகனத்தில் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் டெல்லியில் தங்கியவாறு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: