உ.பி.,யில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் தேதி ஒத்திவைப்பு: அகிலேஷ் கண்டனம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் தேதியை ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடுவதாக இருந்தது. அனால் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று இறுதி பட்டியல் வெளியிடும் தேதி பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 6 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேச மாநிலத்தில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு சட்டபேரவை தேர்தலின்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15.12 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அது 15.44 கோடியாக உயர்ந்தது. எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சுமார் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் மட்டும் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வரைவு மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும் தேதி ஓத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அகிலேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனித தவறு என்று கூறி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடத்த வாய்ப்புள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர் கட்சி முகவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: