நிர்பயா சம்பவம் போல், அரியானாவிலும் நிகழ்ந்த துயரம் : நள்ளிரவில் ஓடும் வேனில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!!

சண்டிகர் : பாஜக ஆளும் அரியானாவில் நள்ளிரவில் ஓடும் வேனில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம் என அக்கட்சி ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பெண்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், பாஜக ஆளும் அரியானா மாநிலத்தில் நள்ளிரவில் ஓடும் வேனில் பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படுகாயம் அடைந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உடலில் 12 இடங்களில் தையல்கள் போடப்பட்டுள்ளன. பலத்த காயம் காரணமாக வாக்குமூலம் அளிக்கும் நிலையில், அப்பெண் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அரியானா காவல்துறை, கொடூர செயலில் ஈடுபட்ட வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நிர்பயா சம்பவம் போல நடந்த இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் அரியானா மாநில பெண்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: