டெல்லி: கரூர் கூட்ட நெரிசலுக்கு, பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் செய்தது. பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவெகவினர் கூறுவதுபோல பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை என வீடியோ ஆதாரங்களுடன் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. டெல்லியில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
