முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு ரயில்ஒன் செயலியில் 3% தள்ளுபடி: ஜனவரி 14ம் தேதி அமல்

புதுடெல்லி: மென்பொருள் அமைப்பில் தேவையான மாற்றங்களை செய்வதற்காக ரயில்வே தகவல் அமைப்பு மையத்திற்கு ரயில்வே அமைச்சகம் நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘டிஜிட்டல் முன்பதிவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரயில் ஒன் செயலில் அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகள் மூலமாகவும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வாங்கும் போது 3 சதவீதம் தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி சலுகை வரும் ஜனவரி 14ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். ரயில் ஒன் செயலில் ஆர்-வாலட் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்களை வாங்குவோருக்கு 3 சதவீத கேஷ்பேக் வழங்கப்டுகிறது. இந்த கேஷ்பேக் தள்ளுபடி நீடிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

இந்தச் சலுகை வேறு எந்த ஆன்லைன் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வாங்கும் தளத்திலும் கிடைக்காது என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் ரயில் ஒன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: