கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன. இதில் புருலியா மாவட்டத்தை சேர்ந்த துர்ஜன் மாஜி(82) என்பவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால், பிடிஓ விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துர்ஜன் மாஜியின் மகன் கனாய் மாஜி கூறுகையில், “என் தந்தையின் பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்தது. அவர் ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. நோட்டீஸ் அனுப்பியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்றார்.
