ஐதராபாத்: ‘புஷ்பா 1: தி ரைஸ்’, ‘புஷ்பா 2: தி ரூல்’ ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக மாறியவர், அல்லு அர்ஜூன். ஐதராபாத் கோகாபேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனது ‘அல்லு சினிமாஸ்’ திரையரங்கு திறப்பு விழாவில், தனது மனைவி சினேகா ரெட்டியுடன் பங்கேற்ற அவர், விழா முடிந்ததும் ஹைடெக் சிட்டி பகுதியிலுள்ள நிலோபர் ஓட்டலுக்கு டீ குடிக்க சென்றார். அவர்களை பார்த்த ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்து, திடீரென்று அவர்களை சூழ்ந்து கொண்டனர். அல்லு அர்ஜூன் மற்றும் சினேகா ரெட்டியுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முந்தியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த அல்லு அர்ஜூன், உடனே கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்த தனது மனைவியை பாதுகாப்பாக அணைத்து அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட மனைவியை மீட்ட அல்லு அர்ஜூன்
- அல்லு அர்ஜுன்
- ஹைதெராபாத்
- இந்தியா
- அல்லு சினிமாஸ்'
- கோகபேட்
- சினேகா ரெட்டி
- நிலோஃபர் ஹோட்டல்
- ஹைடெக் நகரம்
