சென்னை: தனது 81 வயதில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசை அமைத்து, ஒளிப்பதிவு செய்து, ‘கல்லூரி கலக்கல்’ என்ற படத்தை இயக்கியுள்ளார், பொன் உத்ரா. சீனியர் பத்திரிகையாளர் உத்திராபதி, பொன் உத்ரா என்ற பெயரில் இயக்கி ஒரு கேரக்டரில் நடித்துள்ளார்.
ஹீரோவாக எம்.ஜி.முருகன், ஹீரோயினாக பூர்விகா, முக்கிய வேடங்களில் அபிஷேக், சல்மிதா, மாயா மயூரி, பகவதி பாலா, யோகி மணி, எம்.ஜி.ஆர்.மணி, வெல்டிங் குமார், ஆனந்தி, யோகேஸ்வரி, தேவி தர்ஷினி, மகாலட்சுமி, கணேஷ், கார்த்தி நடித்துள்ளனர்.
காதலில் தோல்வி அடைந்த மாணவி, காதலனை பழிவாங்கும் கதையுடன் உருவாகி இருக்கிறது. சென்னை ஊரப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், வளசரவாக்கம், அய்யஞ்சேரி, அருங்கால், காரணை புதுச்சேரி ஆகிய பகுதிகளிள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மூன்று சண்டைக் காட்சிகள் இடம்பெறுகிறது வரும் ஏப்ரல் மாதத்தில் படம் திரைக்கு வருகிறது.
