சென்னை: கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம், ‘அனலி’. இப்படத்தை எழுதி இயக்கியிருந்த தினேஷ் தீனா கூறியதாவது: சென்னையை சேர்ந்த நான், ஒளிப்பதி வாளரான எனது மாமாவை பார்த்து சினிமா வில் சாதிக்க ஆசைப்பட்டேன். முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். பிறகு சொந்த தொழில் தொடங்கினேன். சவுந்தரராஜா நடிப்பில் நான் இயக்கிய ‘கண்ணீரில் நனைந்த பூக்கள்’ என்ற குறும்படம், 54 நாடுகளை சேர்ந்த 360 குறும்படங்களில் சிறந்த படமாக தேர்வானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ‘அனலி’ படத்துக்காக 1.000 கன்டெய்னர்கள் கொண்ட இடத்தில், 60 நாட்கள் படமாக்க வேண்டிய காட்சிகளை 25 நாட்களில் படமாக்கினேன். அதிலும் 12 நாட்கள்தான் மெயின் ஷூட்டிங், மீதி யுள்ள 13 நாட்களில் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை படமாக்கினேன். தயாரிப்பாளரும், ஹீரோயினுமான சிந்தியா லூர்டே சிறப்பாக நடித்தார். வில்லன் சக்தி வாசுதேவன், ‘இந்திரன் சந்திரன்’ வில்லன் கமல்ஹாசன் போல் பேசி நடித்திருந்தார். அடுத்து ஒரு திரைப்படத்தையும், ஒரு வெப்தொடரையும் எழுதி இயக்குகிறேன்.
