நேகா துபியா சர்ச்சை கருத்து நடிகர்கள் 6 ஆண்டுகள் ஓய்வெடுக்க வேண்டும்

மும்பை: பாலிவுட் நடிகர் அக்‌ஷய் கன்னா, கடந்த 2012க்கு பிறகு 6 ஆண்டுகள் திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்தார். தனக்கு ஏற்ற கதை மற்றும் கேரக்டர் கிடைக்காததாலும், சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவர் இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டார். பிறகு 2016ல் ‘டிஷும்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருந்த அவர், தொடர்ந்து ‘இத்தேஃபாக்’, ‘திரிஷ்யம் 2’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ரசிகர் களுடன் கலந்துரையாடிய பாலிவுட் நடிகை நேகா தூபியாவிடம், சினிமா படப்பிடிப்பில் காணப்படும் அதிகப்படியான பணிச்சுமைகள் மற்றும் சோர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நேகா துபியா, ‘நடிகர்கள் அனைவரும் அக்‌ஷய் கன்னாவின் வழியை பின்பற்ற வேண்டும்.

அவரை போல் 6 ஆண்டுகள் வீட்டில் இருந்துவிட்டு, மீண்டும் பழைய கம்பீரத்துடனும், நடிப்புக்கான தரத்துடனும் திரும்புவது என்பது ஆக்கப்பூர்வமான விஷயம். தற்போதைய சோர்வில் இருந்து விடுபட்டு மனநலம் மற்றும் தரத்தை பாதுகாக்க, அவரை போல் நீண்ட ஓய்வெடுப்பதே சிறந்த வழி’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னார். இதையடுத்து அவரது கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: