சர்ச்சையை ஏற்படுத்திய உருவகேலி விவகாரம் மந்த்ராவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை அனசுயா

ஐதராபாத்: தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிகளில் நடிக்கும் அனசுயா பரத்வாஜ், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டி.வி நகைச்சுவை நாடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது சீனியர் நடிகையான ராசி என்கிற மந்த்ராவின் பெயரை பயன்படுத்தி, இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் அவர் பேசிய வசனங்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.

அதாவது, உருவகேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இதுகுறித்து ராசி என்கிற மந்த்ரா தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். மன உளைச்சலின் காரணமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிட்டு, பிறகு தனது குடும்பத்தினரின் ஆலோசனைப்படி அதை கைவிட்டார். இந்நிலையில், அந்த பழைய வீடியோ காட்சிகள் கடந்த ஆண்டு இறுதியில் சில சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அனசுயா பரத்வாஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘சம்பவம் நடந்தபோதே அந்த வசனங்களை எழுதியிருந்த வசனகர்த்தா மற்றும் இயக்குனரிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், அப்போது அதை தட்டிக்கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை. கடந்த காலத்துக்கு சென்று, அன்று நடந்ததை மாற்ற முடியாது. ஆனால், தற்போது நான் பக்குவம் அடைந்து விட்டேன். இதுபோன்ற தரம் தாழ்ந்த நிகழ்ச்சி களில் இருந்து விலகி இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: