ஆஸ்கர் விருது போட்டியில் டாப்-15ல் இடம்பெற்ற ஹோம்பவுண்ட்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கரண் ஜோஹர் தயாரிக்க, நீரஜ் கய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா, ஜான்வி கபூர் நடித்துள்ள ‘ஹோம்பவுண்ட்’ என்ற இந்தி படம், இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது.

கடந்த டிசம்பர் 17ம் தேதி ஆஸ்கர் விருதுகளில் 12 பிரிவுகளுக்கான ஷார்ட் லிஸ்ட் வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இடம்பிடித்திருந்த 15 படங்களில் ‘ஹோம்பவுண்ட்’ படமும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து ஹாலிவுட் இயக்குனர் மற்றும் ‘ஹோம்பவுண்ட்’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் மார்ட்டின் ஸ்கார்சஸி கூறுகையில், ‘இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் பட்டியலிடப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரு மனிதர்களின் நட்பு மற்றும் அடையாளத்துக்காக அவர்களுடைய தேடல், கருணை, மனித பிணைப்பு போன்றவற்றை பேசிய இந்த உண்மைக்கதை என்னை நெகிழ வைத்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: