விஜய் விலகலால் அவதிப்பட்ட மாளவிகா

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படமான ‘தி ராஜா சாப்’, வரும் 9ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், ‘தி ராஜா சாப்’ மூலம் தெலுங்கில் அறிமுகமாவது குறித்து ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் எனது முதல் படமாக, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஒரு காதல் கதை அமைந்தது. ஆனால், அந்த காலக்கட்டத்தில் விஜய் தேவரகொண்டா ‘லைகர்’ என்ற படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டியதால் இப்படத்தை விட்டு விலகினார். அதனால்தான் எனது தெலுங்கு அறிமுகம் ‘தி ராஜா சாப்’ மூலம் அமைந்துள்ளது’ என்றார்.

Related Stories: